AD

சூப்பர்ஸ்டாருடன் மோத இருக்கும் பிரபல நடிகர்!!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, வரும் 10-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில்  தயாரிக்கவுள்ள இப்படத்துக்கான போட்டோஷுட், சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டோஷுட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானதால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
லீக்கான இந்தப் புகைப்படங்களின் மூலம், போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்களில் போலீஸ் உடையின் மேல் பிரவுன் நிற கோட்டு போட்டுக் கொண்டு, கையில் கத்தியுடன் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். இதில், ரஜினி இளமையாகவும் தெரிகிறார்.இந்த படத்தில்  ரஜினிக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தில் வில்லனாக நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா.


இதையும் படியுங்க:
https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_35.html
தீடீரென செம்பா- கார்த்தி நிச்சயதார்த்தம்..!!!



இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்.


#Superstar #Rajnikanth #SJSurya #ARMurugadoss #Tamilcinemaking