AD

`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு

ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் 10 வருடங்களுக்கு முன் 2009 ல் `ஸ்லம் டாக் மில்லினியர்' படத்தின் இசைக்காகவும் பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமைத் தேடிதந்திருந்தார் . 


அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  ஏ.ஆர் ரஹ்மானின்  மூத்த மகள் கதிஜா  ரஹ்மான், ``அப்பாவை நினைச்சு ரொம்ப  பெருமையா இருக்கு.  இந்தப் பெருமைக்குக் காரணம் அவரோட உலகப் புகழ் இல்ல. அவருக்கு நல்லா வர்ற இசையில்லை. அப்பா எங்க மூணு பேருக்கும் சொல்லிக் கொடுத்திருக்க நற்பண்புகளுக்காக அவரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ரெண்டு ஆஸ்கர் வாங்கிட்டு வந்து பத்து வருஷமாச்சு. இன்னும் அப்பா அதே ரஹ்மானாகத்தான் இருக்காரு. அணு அளவும் அவர் மாறல. அப்போ எப்படி இருந்தாரோ அதேமாதிரிதான் இருக்கீங்க. என்ன எங்கக்கூட இருக்க நேரம் மட்டும் குறைஞ்சிருக்கு.

`` சினிமா மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் அப்பா சிறந்து விளங்கினார்.  ஒருத்தருக்கு உதவி செஞ்சார்னாகூட மூணாவது ஆள் சொல்லித்தான் சில விஷயம் எனக்குத் தெரிய வரும். வலதுகை கொடுத்த
இடது கைக்குத் தெரியக் கூடாதுங்கிற மொழிக்கு எடுத்துக்  காட்டானவர்’ என்றார்.

மேலும் பேசிய அவர் தங்களுக்கு ஏதாவது அறிவுரை கூறுமாறு ரஹ்மானிடம் கேட்ட போது  `நான் யாருக்கும் அட்வைஸ் பண்ணமாட்டேன்.
உங்க மனசு சொல்றத கேளுங்க. எங்க அம்மா எனக்குச் சொல்லித் தந்ததை நான் உங்களுக்குச் சொல்லித் தரணும் என்று உறுதியாக இருந்தேன். உங்க மனசுதான் உங்களுக்கான சிறந்த வழிகாட்டி இறைவன்
உங்களை வழிநடத்துவார்’’ என்றார்.