AD

நடிகை காஜல் அகர்வாலை வெளுத்து வாங்கிய நெட்டீசன்கள்..!!!!

நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் தேர்தல் பிரசார சாயல் சார்ந்த படமாக இந்தியில் ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை தடை செய்யக் கோரி காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. சர்ச்சைக்குரிய இந்த படத்தில் மோடி கதாபாத்திரத்தில் நடிகர்  விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிரசார படம் என்பதால் இது பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்து வருகிறது பாலிவுட் வட்டாரம். ஆனால் எல்லோரையும் முந்திக்கொண்டு இந்த படத்துக்கு தானாக ஆதரவு கொடுத்து, நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

இந்த படத்தின் போட்டோவை வெளியிட்டு நடிகர் விவேக் ஓபராய், டிவிட்டரில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதற்க்கு எந்த பாலிவுட்   கலைஞர்கள்  பதிலும் அளிக்கவில்லை அதற்கு வாழ்த்தும்  தெரிவிக்கவில்லை. ஆனால் காஜல் அகர்வால், ‘இந்த படம் சூப்பராக இருக்கும் என நம்புகிறேன்.
படத்தை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள் விவேக்’ என்றெல்லாம் டிவிட் போட்டிருந்தார். உடனே நெட்டிசன்கள், ‘இது தேர்தல் பிரசார படம் என்று தெரியாதா?’ என ஒருவர் கேட்க, ‘அரசியலுக்கு வர ஆசை வந்துவிட்டதா’ என மற்றொருவர் தாக்க, ‘இது என்ன படம், எதற்காக இந்த படம் என உங்களுக்கு தெரியுமா?’ என மற்றொருவர் கேள்வி கேட்க காஜல் அதற்க்கு பதில் ஒன்றும் போடாமல் கப்சிப் ஆகிப்போயிருக்கிறார்.

#Vivek Oberoi #Kajal Agarwal #PM. Narendra Modi #Tamilcinemaking