விஜய் பற்றி ரித்திக் ரோஷனின் அதிரடி பேட்டி
தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். தற்போது தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். மேலும், பல நடிகர், நடிகைகளுக்கும் தளபதியை பிடிக்கும் என்று கூறுவதை கேட்டு உள்ளோம்.
ஆனால் தளபதி விஜய் பற்றி பல பிரபலங்கள் புகழ்ந்து பேசியிருந்தாலும் உலகமே புகழக் கூடிய ரித்திக் ரோஷன் தளபதி விஜய் பற்றி கூறி உள்ள நிலையில் நடிகர் ரித்திக் ரோஷன் அவர்கள் சென்னையில் தன்னுடைய ராடோ கடிகாரம் விளம்பரத்துக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் ரித்திக் ரோஷன் இடம் நீங்கள் விஜய் குறித்து ஒரு வரியில் கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ரித்திக் ரோஷன் அவர்கள் கூறியது,
நடிகர் விஜய்யின் நடனத்தை பற்றி நான் பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எப்படி இவ்வளவு எனர்ஜியோடு ஆடுகிறார் என்று தெரியவில்லை. அவர் நடனம் ஆடுவதற்கு முன் எந்த உணவை எடுத்துக் கொள்கிறார் என்ற ரகசியத்தை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது என்று கூறினார். இப்படி இவர் விஜய்யின் டயட் குறித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகமே கொண்டாடும் ரித்திக் ரோஷன் அவர்கள் தளபதி விஜய்யை பற்றி பேசியது விஜய் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தற்போது இது தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Post a Comment