AD

குஷ்புவை கலாய்த்த காயத்திரி

தமிழ் சினிமா உலகில் 80,90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. தற்போது நடிகை குஷ்பூ அவர்கள் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் குஷ்புவும் ஒருவர். இந்நிலையில் நடிகை குஷ்பு பதிவிட்ட ட்விட்க்கு நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் கிண்டல் செய்து உள்ளார்.இவர்க் இருவருக்கும் அடிக்கடி சண்டை வர காரணம் காயத்ரி பிஜேபி கட்சியின் ஆதரவாளர்கள். குஷ்பூ  காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்பதுதான் 

சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நான் சமூக வலைத்தளங்கள் கணக்கில் இருந்து வெளியேறி விடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தாராம். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதை பார்த்த நடிகை குஷ்பூ  பிரதமரின் இந்த முடிவை கலாய்க்கும் விதமாக நான் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஐஸ்கிரீம் சாப்பிடுவதை விட்டு விடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். 

இதனை பார்த்த நடிகை காயத்திரி ரகுராம் குஷ்பூ டுவிட்டுக்கு அது நல்லது, கொழுப்பு குறையும் என்று கிண்டலடித்து உள்ளார். மேலும், சீனியர் நடிகை என்று கூட பாராமல் காயத்ரி ரகுராம் கேலி, கிண்டல் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.