விக்ரம் செய்த ரகளை- அதிர்ந்துபோன ஷூட்டிங் ஸ்பாட்
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் கிந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார் விக்ரம்.
தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”.மேலும், நடிகர் விக்ரம் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஸ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து உள்ளார். அதில் அவர் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்ட நிலையில் அதில் அவர் கூறியது,
பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே ஒரு நாள் படப்பிடிப்பில் இர்பான் ஓய்விலிருந்தார். அப்போது ஒரு ரஷ்ய நாட்டினர் போல் ஒருவர் வந்து படக்குழுவினரிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தார்.
மேலும், நீங்கள் யார் எங்கள் நாட்டில் வந்து ஷூட்டிங் நடத்திறீங்க என்று ரகளை செய்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அனைவர்க்கும் கோபம் வந்து இந்த ரஷ்யக்காரரை கூட்டிட்டு போங்க என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் தெரிந்தது அந்த ரஷ்ய நாட்டுக் காரர் விக்ரம் தான் என்று . விக்ரமே நான் தான் விக்ரம் என்று சொல்லுமளவிற்கு யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கிருந்தவர்கள் அனைவரும் பயங்கரமாக சிரித்து இருத்தோம். இந்த நிகழ்வை எங்களால் மறக்க முடியாது என்று கூறினார்.
Post a Comment