AD

வடிவேலு வெர்சனை வெளியிட்ட லாஸ்லியா

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.  திருக்குறள் டூ திரைப்பயணம், படத்தில் ஹர்பஜனுக்கு கதாநாயகியாக லாஸ்லியா நடிக்கிறார். 

இவருக்கு பியூட்டி குயின் ஆப் தி இயர் என்ற விருதை வழங்கியுள்ளனர். இந்த விருது வழங்கும் விழாவிற்கு லாஸ்லியா ஸ்லீவ்லெஸ் புடவையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த நல்ல வரவேற்பைப் பெற்றார்.  தற்போது விளம்பரத்திற்காக போட்டோஷூட் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் ராஷ்மிகா வடிவேலு வெர்சன் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆனது. தற்போது ரசிகர்கள் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து இது என்ன வடிவேலு வெர்சன் என்று கலாய்த்து வருகின்றனர்.