AD

மனதை உருக்கும் ஆர்யாவின் வீடியோ கவலையில் சயிஷா

தமிழ் சினிமா உலகில் பிளேபாயாக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா அவர்கள் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வரும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில்  வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘சல்பேட்டா பரம்பரை’ என்று பெயர் வைத்துள்ளனர். 

இப்போது ஆர்யா மேற்கொள்ளும் பயிற்சி மிகவும் மனதை வாட்டும் அளவிற்குள்ளது. இந்த வீடியோவில் ஆர்யாவின் உடலில் விழும் ஒவ்வொரு அடிகளும் இடி போல் விழுகின்ற நிலையில் நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா அவர்கள் இந்த வீடியோவை பார்த்து கூறியிருப்பது, உங்களை இந்த மாதிரி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. அதிக கடின உழைப்பு போடுகிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார். ஆர்யாவின் உடற்பயிற்சி வீடியோவும், நடிகை சாயிஷாவின் டுவிட்டும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.