AD

நீச்சல் உடையுடன் நீச்சல் குளத்தில் பிரபலம்

இசை ரசிகர்கள் அனைவரும் FM ஸ்டேஷனுக்கு போன் செய்து தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் டிவி நிகழ்ச்சியில் வீடியோ ஜாக்கி என்று அறிமுகம் செய்து தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது எஸ்எஸ் மியூசிக் தான். சன்மியூசிக் தொடங்குவதற்கு முன்பாகவே துவங்கப்பட்ட இந்த தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என்று பல்வேறு விதமான மொழிகளின் பாடல்களும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு விஜெக்கள் தொகுத்து வழங்கினார்கள். தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான வீடியோ ஜாக்கிகள் பிரபலமானவர்கள் அதில் மிகவும் பிரபலமான பெண் தொகுப்பாளினியாக இருந்தவர் பூஜா தான்.

 எஸ் எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாது பூஜா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  கிரேக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில்  கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது. 

அதன் பின்னர் பூஜா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா அடிக்கடி உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், அவ்வப்போது சில கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிற வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இது பெரும் வைலராகிவருகிறது.