AD

குட்டித்தலையின் பிறந்த நாள் கொண்டாட்டம்

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தல அஜித். இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். ஆத்விக்கு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது தற்போது ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

மேலும், அஜித்தின் ரசிகர்கள் ஆத்விக் பிறந்தநாளை மிகப் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் தற்போது கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் பலர் வீதிகளில் போஸ்டர் ஒட்டியும், பேனர் அடித்தும் தங்களுடைய ஹீரோவின் மகனின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடனும் கோலாகலமாக ஆத்விக் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.