AD

திரையரங்கில் திரௌபதி படத்துடன் ஷாலினி

சமீபத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்துள்ளார். 

இந்த நிலையில் அஜித்தின் மனைவியும் இந்த படத்தின் ஹீரோவான ரிச்சர்ட்டின்ன் சகோதரியுமான ஷாலினி மற்றும் ரிச்சர்டின் மற்றொரு சகோதரியான சமீலா, அஜித்தின் மகள் அனுஷ்கா ஆகியோர்கள் இந்த படத்தினை ரோகிணி திரையரங்கத்தில் கண்டுகளித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் நேற்று வைரலாக பரவியது.

இந்த புகைப்படம் வைரலானதால் நேற்று #ShaliniAjith என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு ஷாலினி, இந்த படத்தின் இசையை பாராட்டியுள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜூப்லின் என்பரிடம் ஷாலினி கூறியுள்ளதாக திரௌபதி படத்தின் இசையமைப்பாளர் ஜூப்லின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.