AD

ரசிகர்களின் கோவத்துக்கு ஆளான ரித்விகா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் மக்களிடையே பெரிய அளவு பிரபலமானவர் நடிகை ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி ஹீரோயினாக இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சமீபத்தில் நடிகை ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர் ஐயோ பாவம் பட வாய்ப்பு இல்லாமல் வெட்டியாக இருக்காங்க என்று கமெண்ட் செய்திருந்தார்.

ரசிகரின் இந்த கமெண்ட்டை பார்த்து மிகவும் கோவமடைந்த ரித்விகா மூடிட்டு போடா என்று அந்த ரசிகரை திட்டிய தோடு நடுவிரலை காட்டி படுமோசமாக பதிலளித்துள்ளார். ரித்விகாவின் இந்த பதிலைக் கண்டு ஷாக்கான ரசிகர் ஒருவர் பிக்பாஸில் ஒன்னும் தெரியாத மாதிரி டைட்டில் வென்ற நீங்க இப்ப என்ன சிஸ்டர் இப்படி எல்லாம் பேசுறீங்க . அப்பா அது பொய்யா என்று கமன்ட் செய்துள்ளார். மேலும் ரித்விகாவின் இந்த பதிலுக்கு அனைவரும் எதிர்ப்புதெரிவித்துவருகின்றனர்.