அம்மன் வேடத்தில் நயன்தாரா
காமெடி நடிகர் ஆர்ஜே.பாலாஜி இயக்குனராக அறிமுகமாகும் படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மனாக நடிப்பது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நயன்தாரா. இதற்காக அவர் விரதம் இருந்து நடித்து வருகிறார்.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டெர்நேஷணல் சார்பில் ஐசரி கணேஷ் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் அம்மன் வேடத்தில் இருக்கும் நயன்தாராவின் பாதி முகம் மட்டும் இடம்பெற்றிருந்த நிலையில் 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நயன்தாராவின் முழு தோற்றமும் உள்ளது.
இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், ரம்யா கிருஷ்ணனை தொடர்ந்து அம்மன் வேடத்திற்கு நயன்தாரா மிகவும் பொருந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
Post a Comment