AD

அன்பு மகளுக்காக பிரபல நடிகர் செய்த விடயம் - பரபரப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கொட்டாச்சி.  இவர் சினிமா உலகில் தன்னை சிறந்த காமெடியனாக நிலைநிறுத்திக் கொள்ள பல போராட்டங்களை செய்து வருகிற நிலையில் இவருடைய மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆகி விட்டார்.

கடந்த ஆண்டு  சூப்பர் ஹிட் கொடுத்த இமைக்காநொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடித்திருந்தார். இந்த படத்தில் மானஸ்வி நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் இருந்தது. இதனாலே இந்த படத்தின் மூலம் மானஸ்வி விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு இருட்டு தர்பார்  போன்ற பல படங்களில்  நடித்து உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது மானஸ்விக்கு கிடைத்திருந்தது . இந்த விருதை தன் தந்தை கொட்டாச்சி உடன் சென்று வாங்கியிருந்தார் மானஸ்வி. அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக தளங்களில் வைரலாக பரவி வந்ததனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கொட்டாச்சிக்கும், அவருடைய மகள் மான்ஸ்விக்கும் தங்களுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில் நடிகர் கொட்டாச்சி தனது அன்பு மகளின் பெயரை தனது கையில் டாட்டூ குத்திக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.