AD

விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்த பிரபலம்

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்க்கு தன் அன்பு முத்தத்தை கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. பொதுவாகவே கூகுள் புகைப்படத்தில் விஜய் சேதுபதி தன் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்தால் அதில் அனைவருக்கும் முத்தம் கொடுத்து இருப்பார். தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதி  அனைவருக்கும் முத்தம் கொடுத்திருப்பார். 

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் கலை இயக்குனர் சதீஷ் குமார் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள் படக்குழுவினர். அப்போது சதீஷ்குமாருக்கு அன்பாக முத்தம் ஒன்றை கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

 இதை கவனித்த விஜய் தனக்கும் முத்தம் கொடுக்குமாறு கிண்டலடித்துள்ளார். உடனே விஜய்யை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் மழை பொழிந்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்வின் போது ஒட்டு மொத்த படக்குழுவினரும் இதை பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்து வந்துள்ளனர். சமீபத்தில் விஜய் தன் ரசிகர்களுடன் எடுத்த செல்பி பெருமளவில் வைரலானது. அதைப் போலவே விஜய் சேதுபதி, தளபதி விஜய்க்கு கொடுத்த முத்தம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது XB நிறுவனம்.