ஒன்றினைந்தது விஜய் தொலைக்காட்சி பிரபலத்தின் குடும்பம்
விஜய் தொலைக்காட்சியில் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி இவர்கள் இருவரும் யாருக்கும் அறிவிக்காமல் திடீர் திருமணம் செய்து கொண்ட நிலையில் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ஆல்யா மானஸா வீட்டில் இவர்களது திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
திருமணம் முடிந்து இத்தனை மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கிறார் என்று சஞ்சீவ் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், ஆல்யா வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்பதால் அவரது பெற்றோர்கள் ஆல்யாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இருப்பினும் அவரது தந்தை மட்டும் ஆல்யா-சஞ்சீவிடம் பேசி வந்தார்.
ஆனால், அவரது அம்மா பேசுவது இல்லை இது குறித்த கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேட்டியில் பேசி இருந்த சஞ்சீவ், அவரது அப்பா பேசுவதால் தற்போது எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கூடியிருக்கிறது எனவே நிச்சயம் என்னுடைய மாமியார் வீட்டிற்கு வந்து ஆல்யாவை ஆசீர்வாதம் செய்வார் என்று நம்புகிறேன். பேரனோ, பேத்தியோ தன்னுடைய குழந்தையை முதலில் தனது அம்மாவின் கையில் தான் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஆல்யா மானஸா ஆசை பட்டது போலவே அவரது தாயும் பேசி விட்டார். ஆல்யா மானஸாவிற்கு சமீபத்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி செட்டில் வளைகாப்பு சிம்பிளாக நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களையும் விடீயோக்களையும் சஞ்சீவ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஆல்யா மானசாவின் அம்மா அப்பா வந்திருந்தனர். எனவே, ஆல்யா மானசா ஆசை பட்டது போல அவருக்கு பிறக்கும் குழந்தையை முதலில் அவரது தாயே முதலில் கையில் ஏந்துவர் என்று ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துதெரிவித்துவருகின்றனர்.
Post a Comment