AD

கவின் பட தயாரிப்பாளர் மதுமிதாவிற்கு வாய்ப்பு

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பெண் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். இவர் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். திடீரென்று நடிகை மதுமிதா அவர்கள் தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டதனால்  பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். 

இந்நிலையில் தற்போது நடிகை மதுமிதா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து நடிகை மதுமிதா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில் தற்போது அவர் டுவிட்டரில் பிக்பாஸ் நிகழ்ச்சி மதுமிதா குறித்து கருத்து கூறியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது,

நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்த போது நடிகை மதுமிதா குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தேன். ஆனால், அவரைப் பற்றி நேரில் சந்தித்து தெரிந்து கொண்ட பிறகு தான் அவருடைய நல்ல குணங்கள் என்ன என்பது எனக்கு புரிந்தது. 

யாரையும் டிவியில் காண்பிப்பதை வைத்து அவருடைய குணத்தை சொல்ல முடியாது. உண்மையாலுமே நடிகை மதுமிதா அவர்கள் நல்ல குணம் உடையவர்கள். என்னுடைய அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்து உள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கு மதுமிதா அவர்களும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது இவர்கள் பதவிட்ட ட்விட்டர் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.