AD

பிக்பாஸ் பிரபலத்துக்கு கிடைத்த பரிசு

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலமடைந்தவர் தர்சன் .

 இவர் இதனால் எதிர்காலத்தில் வரும் கமல் படத்தில் தர்ஷன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்னால் சனம் ஷெட்டி விவகாரத்தால் தர்ஷனின் பெயர் முழுவதும் டேமேஜ் ஆனது. இந்த பிரச்சினை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தர்ஷனுக்கு ஒரு பரிசு கிடைத்துள்ளது. 

 தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது போட்டியாளர்களுக்கு யமஹா பைக்கை வைத்து போட்டோ ஷூட் நடத்தி இருந்தனர். அந்த போட்டோ சூட்டின் போது முதல் பரிசை வென்ற தர்ஷனுக்கு யமஹா பைக் ஒன்று பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.அது தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இத்தனை மாதங்கள் கழித்து அந்த பரிசுக்கு வந்து சேர்ந்துள்ளது அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் தர்சன் பதிவிட்டுள்ளார்.