AD

சிவகார்த்திகேயன் படத்தில் சாரா

90 களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்திலிருந்தே ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளில் தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் தொலைக்காட்சியிலிருந்து விளக்கினார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ச ரி க ம  ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

சமீபத்தில் இவரும் இவரது செல்ல மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க  இதை கண்டு  பலரும் வியந்தனர் இந்த நிலையில் அர்ச்சனா மகள் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் அதுவும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் டாக்டர் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை அர்ச்சனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் இதை வைரலாக்கிவருகின்றனர்.