AD

ரசிகரின் சந்தேகத்தை தீர்த்து வைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் முண்ணனி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு தான் .தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு சில ஆண்டுகளாக பல சர்ச்சைகலில் சிக்கியுள்ளார்.  இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது குஷ்பூ அவர்கள் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி மீதும் ,பா.ஜா.கா மீதும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் .இதனால் பல பா.ஜா.கா பிரமுகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் .

கடந்த ஆண்டு மோடி மீது இவர் தொடந்து வைத்து வந்த குற்றச்சாட்டால் காண்டான பா ஜா க ரசிகர்கள் குஷ்பு மீது எதிர் தாக்குதல் தொடுக்கும் விதமாக குஷ்புவை இந்து இல்லை என்றும் அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் என்றும் அவரது உண்மையான பெயர் நிஷாத்கான் அதனால் தான் அவர் தொடந்து இந்துக்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார் என்று தெரிவித்தனர். 

மேலும், டுவிட்டரில் நிறைய நெகட்டிவ் கருத்துக்கள் வருவதால் சமீபத்தில் டுவிட்டர் கணக்கை கூட முடக்கியிருந்தார்.இருப்பினும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் இவர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர் ஒருவர், எனக்கு ஒரு சந்தேகம் பிரச்சினையில்லை என்றால் தயவு செய்து பதில் சொல்லுங்கள் நீங்கள் மதம் மாறியதற்கு திருமணம் காரணமா ? இல்லை முந்தைய மதத்தின் மீது நம்பிக்கையில்லாதது காரணமா என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த குஷ்பு நான் என்னுடைய மதத்தை மாற்றிக் கொள்ளவில்லை மேலும் நான் எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மதத்தை பொருத்தது அல்ல என்று பதிலளித்துள்ளார்.