AD

ரசிகரை சரமாரியாக பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமல் ஸ்ருதிஹாசன் இவர்   ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 7 ஆம் அறிவு  படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிற வகையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்ததனை கண்ட ரசிகர்கள் பலரும் நீங்கள் மிகவும் ஒல்லியாக விட்டீர்கள் என்றும் இப்படி உங்களை பார்க்கவில்லை என்றும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்திருந்தார்கள். 

இதனால் கோவமடைந்த சுருதி சமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்களை ஒப்பிட்டு ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் இதற்கு முன்னால் போட்டிருந்த பதிவை அடுத்து நான் இந்த பதிவை போட நினைத்தேன். நான் மற்றவர்களின் கருத்துக்காக வாழ முடியாது தொடர்ச்சியாக நான் குண்டாக இருக்கிறேன் என்றும் ஒல்லியாக இருக்கிறேன் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த இரண்டு புகைப்படமும் மூன்று தினங்களில் எடுக்கப்பட்டதுதான். என்னுடைய உடலை பார்த்துக் கொள்ள நான் கடினமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உழைத்திருக்கிறேன்.

எனவே அந்த பயணத்தை நான் விவரிக்க முடியாது. இங்கே யாரும் அடுத்தவர்களின் நிலையைக் குறித்து முடிவெடுக்க பிரபலமானவர்கள் கிடையாது. இது என்னுடைய வாழ்க்கை இது என்னுடைய முகம் என்பதில் நான் மகிழ்ச்சியாக கூறுவேன். நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன். 

அதற்காக நான் அசிங்கப்பட இல்லை. அதனை நான் எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா ? இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா ? கிடையவே கிடையாது நான் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. நாம் செய்யும் மிகப்பெரிய செயல் ஒருவரை எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்வதுதான். அன்பை பரப்புங்கள் என்னை நேசிக்க ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.