AD

சினிமாவில் பின்தங்கும் சூர்யா

தமிழ் சினிமா உலகில் முண்ணனி நடிகராக ஒரு காலத்தில் விஜய் அஜீத்துக்கு டப் கொடுத்த முக்கியமான நடிகர்  சூர்யா. இவர் 2000 - 2010 வரை தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு பொன்னான ஆண்டுகள். தொடர்ச்சியாக பல படங்களில் வெற்றியை கொடுத்து விஜய், அஜித் போன்றவர்களின் மார்க்கெட்டை பின்னுக்குத்தள்ளி வெற்றி நாயகனாக வலம் வந்தார். அதே கையோடு தெலுங்கிலும் கால் பதித்த சூர்யாவுக்கு அங்கேயும் பலத்த வெற்றி.

ஆனால் சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றதனால்  தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவின் படத்துக்கான வியாபாரங்கள் குறைவாக நடந்துள்ள நிலையில்  இதுவரை தெலுங்கு பதிப்பில் சூர்யாவிற்கு 40 கோடி வரை பிஸ்னஸ் இருந்தது. ஆனால் தொடர் தோல்விகளால் தற்போது 20 கோடி வரை மட்டுமே சூரரைப்போற்று படத்தின் பிசினஸ் ஆகியுள்ளதால் கவலையில் உள்ளாராம் சூர்யா.

இருந்தும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் நிச்சயம் சூர்யாவை மீட்டுக்கொண்டு வந்துவிடும் என நம்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது.