AD

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிற நிலையில் இதன் படிப்பிடிப்பு நெல்லை,  தூத்துக்குடி மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசுவதாக ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில்  வலம் வருகிறது. அதில் எங்கள் சமுதாயத்தை பற்றி அவதூறாக ஏதேனும் திரைப்படம் எடுத்தால் தலையிருக்காது. வெட்டிக்கொலை செய்வோம் என்று நடிகர் தனு‌‌ஷ்,  இயக்குனர் மாரிசெல்வராஜ் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசப்பட்டுள்ளமை  பெரும் வைரலாகிவருவதுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.