கிண்டலுக்குள்ளான பிரபலத்தின் போட்டோ ஷூட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் . இந்த சீரியலில் முக்கியமான பல நடிகர்கள் நடிக்கிறார்கள். குடும்பபாங்கில் செல்லும் இந்த தொடரில் மூன்று அண்ணன் தம்பி தம்பதியர்கள் நடித்தாலும் இந்த தொடரில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ஜோடிதான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றி காண காரணமானவர்களில் இவர்களும் ஒருவர். நடிகை சித்ரா அவர்கள் முதலில் விஜே வாக பின் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் . பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத்தொடங்கினார்.
தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று உள்ள இவர் முல்லைக்கு சித்ரா என்ற குரூப் ஒன்றை ஓபன் செய்து ரசிகர்கள் சித்ரா குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்ற நிலையில்,
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் சித்ரா அந்த காலத்தில் வரும் சரோஜாதேவியை போல வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் பல்வேறு வித்தியாசமாக இருக்கிறது கூடுதலாக இந்த கெட்டப் நல்லவே இல்லை என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.




Post a Comment