AD

சிலிம்மாக இருக்க தமன்னாவின் வைரலாகும் டிப்ஸ்

பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களுடைய அழகு குறித்தும், உடல் பிட்னஸ் குறித்தும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் அதை தான் விரும்புகிறார்கள். வருகிறார்கள். தான் நடிகர், நடிகைகள் சினிமாவில் நீண்ட நாள் நிலைத்து இருக்க முடிகிறது. மேலும், நடிகர், நடிகைகள் தங்களுடைய உடல் எடையை ஃபிட்டாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளை செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஹீரோயின்கள் தங்களுடைய அழகும், உடல் எடையும் குறித்து அதிக கவனம் செலுத்துவார்கள். அதற்காக பல்வேறு விஷயங்களை செய்வார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் சினிமா துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயின்கள் நிலைத்து நிற்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல.

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கின்ற நடிகை தம்மனா. இவர் தமிழில் பல அனைத்து முன்னணி பிரபல நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்து பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.  அப்படி இருந்தும் அவர் தன்னுடைய உடலை ஒல்லியாகவும், பிட்டாகவும் வைத்துள்ளார். 

இவர் தன்னுடைய உடலை பிட்டாக வைத்திருப்பதற்கு மற்றவர்களைப் போல் உணவுகள் எல்லாம் சாப்பிடாமலிருந்ததில்லை. எதையும் அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்ற பழமொழிக்கு ஏற்ப திகழ்ந்து வருகிறார் இவர். இந்நிலையில் இவர் தன்னுடைய அழகு குறித்தும், பிட்னஸ் குறித்தும் மற்றவருக்கு டிப்ஸ் கொடுத்து இருக்கிறார். அரிசி சோறு சாப்பிடுவது தொடங்கி தண்ணீர் வரை சோறு விஷயங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.  

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கென்னென்ன உணவு உட்கொள்ள வேண்டும் என அது சம்பந்தமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் . அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.