AD

வரலட்சுமியின் புகைப்படத்தை கிண்டல் செய்த பிரபலம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரின் மகளும் பிரபல  நடிகையும்  வரலட்சுமி சரத்குமார்  இவர் போடா போடி படத்தில் அறிமுகமானவர் அதன் பின்னர் பல்வேறு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

தொடர்ந்து தற்போது இவர் சேசிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். சேசிங் படத்தில் வரலட்சுமி சரத்குமார் பைக் ரைடர் ஆக நடித்துள்ள இவர் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கின்ற நிலையில்  சம்பத்தில் புகைப்படமொன்றை பதிவிட்டிருந்தார். அதில் புடவை கட்டிகொன்டு குனிந்த தலையோடு இருக்கும் அந்த புகைப்படத்திற்கு நான் வெளிப்படையாக வெட்கப்பட்ட அந்த சில நாட்கள் என்று கேப்ஷனும் செய்திருந்தார்.

இவ்வாறு இவர் வெளியிட்ட  இந்த புகைப்படத்துக்கு  பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்த நிலையில் நடிகர் பிரசன்னா இந்த புகைப்படத்திற்கு பார்ட்னர் நீயா? வெட்க்கப்படுறியா? எப்படி? புகைப்படத்திற்கு கிண்டலாக கமன்ட் செய்துள்ளார். 

அதற்கு பதிலளித்த வரலட்சுமி , அதனால் தான் அந்த நாட்களில் என்று குறிப்பிட்டிருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளமை பெரும் வைரலாகியுள்ளது.