AD

உடல் எடையை குறைக்கும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து  வருபவர் விஜய் சேதுபதி . இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே வேற லெவல் தெறிக்க விட்டது.  இந் நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியும், விக்னேஷ் சிவனின் மீண்டும் புது படம் வெளிவவுள்ளது. 

விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த புதிய படத்திற்காக விஜய் சேதுபதி உடல் எடையை குறைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து விஜய் சேதுபதி–நயன் ஜோடி மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்டதனை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 

இந்த படம் பற்றி பேட்டியளித்த விக்னேஷ் சிவன்   கூறியததாவது ,

இந்த படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தலைப்பு வைத்து உள்ளார்கள்.  படத்தின் தலைப்பே எல்லாவற்றையும் விளக்கி விடும். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வேடிக்கையான ரொமான்டிக் திரைப்படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன் மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். 

மேலும், இந்த படத்தில் மிகவும் சேதுபதி அவர்கள் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக எடையைக் குறைக்க உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்னிந்தியாவிலும் அதை சுற்றியுள்ள இடத்திலும் நடத்த உள்ளோம். 

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனிருத்துடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் அனிருத்தின் மிகப்பெரிய ரசிகன். இந்த படத்திற்காக பாடல்களை எழுத ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.