AD

வெளியான குட்டித்தலயின் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரம்  தல அஜித். அஜித்- ஷாலினி  திருமணத்திற்கு பின்னர் நடிப்பை விட்டு குடும்பதத்தை கவனித்து வருகின்ற நிலையில் அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளார்கள்.

பெரும்பாலும் அஜித்  தன்னுடைய குழந்தைகளை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வருவதை தவிர்ப்பார்.  ஆனால் அஜித்தின் குழந்தைகள் போட்டோவை சமூகவலைத்தலங்களில் பார்ப்பது குறைவு. ஆனாலும், விமான நிலையம், ஷாப்பிங், பொது இடங்கள் என இருக்கும் போது தல அஜித்– ஷாலினியின் குழந்தைகளின் புகைப்படங்களை பார்க்க முடியும். 

அதே போல தல அஜித்தின்  மகன் ஆத்விற்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்நிலையில் ஷாலினியுடன் குட்டி தல ஆத்விக் நின்று கொண்டிருப்பது போன்ற போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் செம ட்ரெண்ட்டிங் ஆகியிருந்தது. குட்டி தல ஆத்விக் போட்டோக்களுக்கு பயங்கரமாக போஸ் கொடுத்து அப்பாவை மிஞ்சி விட்டார் என்று அஜித்தின்  ரசிகர்கள் கூறி வருவதுடன் அனைவரும் ஆத்விக் போட்டோவை சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாக்கி வருகிறார்கள்.