AD

தொடர்ச்சியாக படவாய்ப்பு குவியும் பிக் பாஸ் பிரபலம்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் சுந்தர்.சியும் இவர் கமர்சியல் படங்களாகவே திரையுலகில் கொடுத்து வந்தார் ஆனால் சமீப காலமாகவே சுந்தர் படங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிற  வகையில் இவர் எழுதி இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை படம்  மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததையடுத்து சுந்தர் சி  இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அரண்மனை 2 படம் வெளியாகி இரண்டாவது பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், சமீப காலமாக சுந்தர் சி இயக்கிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 

இந்நிலையில் சுந்தர் சி அவர்கள் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க 3 படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கவுள்ளார். 

மேலும் இந்த படத்தில் விவேக், யோகி பாபு உட்பட பலர் நடிக்க உள்ளனர் என்று படக்குழுத் தெரிவித்திருந்த நிலையில் பொதுவாகவே சுந்தர் சி இயக்கும் பேய் படத்தில் மூன்று கதாநாயகிகள் இருப்பார்கள். அந்த வகையில் இரண்டாவது கதாநாயகியாக பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  பிரபலமானவர் சாக்சி இவர்  தமிழில் சில படங்களில் நடித்து பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடித்து வருகிறார். 

தொடர்ந்து அரண்மனை 3 ம் பாகத்தில் ஆர்யா நடிப்பில் வரவிருக்கும் டெடி படத்தில் சாக்சி  நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் முதல் பாகத்தில் நடித்த ஆண்ட்ரியாவும் இந்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதிகபடியான படங்களில் கமிட் ஆகியிருப்பது சாக்சி தான்.