AD

காதலை உறுதி செய்த முகென் - அபிராமியின் அதிரடியான கமன்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகென் ராவ். இவ் சீசனில் முதன் முதலில் அபிராமி தான் காதலை தொடங்கி வைத்தவர். இவர் முதலில் நண்பராக முகென் ராவுடன் பழகினார்  பின்  நாட்கள் செல்ல செல்ல முகென் மீது வைத்திருந்த அன்பு, பாசம் அனைத்தும் காதலாக மாறிவிட்டது ஆனால் முகென் ராவ் தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி அபிராமியின் காதலை மறுத்தது யாவரும் அறிந்ததே

.இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு முகென், தனது காதலியுடன்  இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தனது காதலை உறுதி செய்தார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்தி கமன்ட் செய்தனர். அதில் ரசிகர் ஒருவர், இதை பார்த்தா அபிராமி கண்டிப்பா அழுவாங்க என்று கமன்ட் செய்து இருந்தார். 

இந்த கமெண்ட்டிற்கு பதில் அளித்த அபிராமி, கண்டிப்பாக அழ மாட்டேன். அவனை நினைத்து எனக்கு சந்தோசம் தான். உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்  கமன்ட் செய்துள்ளார்.