AD

தனுஷை எச்சரித்து வழக்கு தொடர்வதாக தெரிவித்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் விசு . இவர் முழு பெயர் எம் ஆர் விஸ்வநாதன். இவர் தற்போது  நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடர்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தகவல் வெளியாகிய தகவலானது, 

ரஜினிகாந்த் நடிப்பில் 1981ஆம் ஆண்டு திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் நெற்றிக்கண். அந்த படத்தை தற்போது நடிகர் தனுஷ் அவர்கள்  ரீமேக் செய்யயிருப்பதாகவும், ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பதாகவும் கூறி அதற்கான ஆரம்பகட்ட வேலைகளை தொடங்கியிருப்பதாகவும், தற்போதைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் சில மாற்றங்கள் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை இயக்குவது யார் என்று பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை தனது அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக்கூடாது என்று இயக்குனர் விசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 

இது குறித்து அவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,

தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எல்லாம் பொய் என்று சொன்னால் நான் கண்டுகொள்ளமாட்டேன். உண்மையாகவிருந்தால் இந்த படத்தின் தயாரிப்பாளர் கவிதாலயாவிடம் உரிமம் வாங்குவதை விட இந்த படத்தின் கதாசிரியரான என்னிடம் வந்து கேட்பது சரியாக இருக்கும். என்னிடம் உரிமை பெறாமல் நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் நான் வழக்கு தொடருவேன் என்று கோபமாக கூறியுள்ளார்.  விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.