AD

முத்தம் கொடுத்த சாய் பல்லவி - சமந்தாவின் ரியாக்சன்

தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கிய நாகார்ஜுன் மகன் நாக சைதன்யா இவர்  தற்போது தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே நாக சைதன்யாக்கு சில ஆண்டுகளுக்கு முன் பிரபல நடிகை சமந்தாவுடன் திருமணமான நிலையில் தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய்பல்லவி நடித்துள்ள படம் லவ் ஸ்டோரி  இந்த படத்தில் ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதலை அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர். 

இந்த படம் முழுக்க முழுக்க பக்கா தெலுங்கானா கலாச்சாரம் பாணியிலுள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் மியூசிக் ஆல்பத்தை தயாரித்த பவன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் ஒரு சூப்பர் ரொமான்டிக் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு காட்சியில் நாகசைதன்யா அவர்களின் கண்ணத்தில் சாய்பல்லவி காட்சியில் அழுத்தமாக முத்தம் இடுகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் அம்சங்களை கொண்ட கதை. இந்த படத்தை பார்ப்பதற்கு  ரசிகர்கள் அதிக ஆவலுடன் உள்ள நிவைலயில் இந்த பாடலைபார்த்த ரசிகர்கள் அனைவரும் இதை சமந்தா பார்த்த என்னாவது?? என்று சமூக வலைத்தளங்களில் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.