AD

காதலை உறுதி செய்த விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ராட்சசன் எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

இந் நிலையில் , விஷ்ணு விஷால், ரஜினி நடராஜ் என்பவரைக்  காதலித்து திருமணம் செய்து இவர்களுக்கு  ஒரு  மகனும் பிறந்திருந்தது எனினும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தார். ஆனால் தனது மகனை மட்டும் இவர் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷ்ணு விஷால், ஒரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படமொன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். பின்னர் தான் தெரிந்தது அந்த பெண் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பது. 

கடந்த சில காலமாகவே ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டிருந்தார். மேலும், இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதை உறுதி செய்யும் விதத்தில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ஜுவாலா கட்டா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். My valentine என்று குறிப்பிட்டு  விஷால் கன்னத்தில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை . அதனை விஷ்ணு விஷாலும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் விஷ்னு விஷால், ஜுவாலா கட்டாவை காதலிக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.