AD

அதிர்ச்சியில் ரசிகர்கள் - காதலர் தினத்தன்று கவினின் பதவி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது .சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லாமல் போன இந்த நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதல்  வேற லெவலில் இருந்தது எனலாம் தற்போதும்  இவர்கள் இருவரின்  காதல் காவியங்கள்  குறித்து சமூக வலைத்தளங்களில் கவிலியா என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணமுள்ளன. 

மேலும், இவர்கள் திருமணம் பற்றி கவின், லாஸ்லியா யோசிப்பதை விட இவர்களுடைய ரசிகர்கள் தான் அதிகம் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா ஆனால் இதுவரை வெளியே கூறியது கிடையாத நிலையில், 

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் தனது நம்பரும் நடிகருமான பீட்டருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, காலம் முழுக்க என் காதலர்தினம்  உன்கூட தான் இருக்கும்னா, அத யாரால மாத்த முடியும் என்று கேப்ஷன் செய்துள்ளார். 

இதனை கண்ட கவின் லாஸ்லியா பலரும் அப்போ லாஸ்லியா ? என்று கமன்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே, கவினுக்கு 2019 ஆம் ஆண்டின் Most Desirable Men On Television என்ற பட்டியலில் முதல் இடம் கிடைத்தது. அந்த வலைத்தளத்திற்கு கவின் பேட்டி அளித்துள்ளபேட்டியில் , நீங்கள் சிங்கிளா இல்லை கமிட்டடா என்று கேள்வி கேட்கப் பட்டதற்கு சிங்கிள் என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.