AD

பிரபல தொகுப்பாளினி சமைத்துகொண்டிருக்கையில் வெடித்த குக்கர்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாக அறிமுகமாகி பின் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனது மட்டுமல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. 

மணிமேகலை உஷைன்  காதலுக்கு  மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

உஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் பதிவுத்திரமணம் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பதுடன் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வருகிற நிலையில் இவரது வீட்டில் குக்கர் வெடித்து சிதறி சமையலறையே அலங்கோலமாகவுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மணிமேகலை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ள வீடியோ அவரது கணவர் உசைன் எடுக்க அதில் மணிமேகலை கூறியிருப்பது, எங்கள் வீட்டில் இன்று சமையல்கார அக்கா வரவில்லை. அதனால் உடலுக்கு ஆரோக்கியமாக நாமே சமைக்கலாம் என்று முடிவு செய்தேன்.அதால்  இரண்டு டம்ளர் அரிசிக்கு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றிதான் குக்கரை வைத்தேன் ஆனால் குக்கர் எப்படி வெடிச்சது என்று எனக்கு தெரியல? எனக்கு இப்ப தெரிஞ்சாகணும், என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது? நமக்கு வராத விஷயத்தையும் ட்ரைப் பண்ணி நான் பண்ணி இருக்கேன். ஆனால், இந்த குக்கருக்கு என்ன தெரியம்.

ஐயோ, நான் குக்கர் கிட்ட மட்டும் இருந்தா என்ன ஆகி இருக்கும். இந்த மாதிரி நேரத்துல எனக்கு உதவி பண்ணாம வீடியோ எடுக்கிற இந்த உசேன் பண்ணாம ஆளுங்கள வச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது. அட்லீஸ்ட் ஒரு வருடத்துக்கு சமையல் பக்கமே போகவே கூடாது. வீடு புள்ள கிளீன் பண்ணறது கூட எனக்கு கஷ்டமா இல்ல. நான் மேக்கப் இல்லாம இருக்கும் போது வீடியோவ எடுக்கிறது தான் மனசுக்கு வருத்தமா இருக்கு என்று நக்கலாக கூறியிருந்தார் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகிவருகிறார் .