AD

மனைவியின் வயிற்றில் கைவைத்த படி பிரபலம் வெளியிட்ட புகைப்படம்

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையிலிருக்கும் நடிகர், நடிகைகள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ராஜா  ராணி  சீரியலில் காதலர்களாக வலம் வந்த ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்தது மட்டுமன்றி  ஆல்யா மானசாவின் பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். 

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  மானசா கர்ப்பமாக இருப்பதாகாக சஞ்சீவ் மகிழ்ச்சியுடன் கூறி இருந்தார். தொ்ர்ந்து ஜனவரி மாதம் தான் ஆலியா மானசாவிற்கு வளைகாப்பு நடந்தது. வளைகாப்பின்  போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்   பெரும் வைரலாகியது.

இந்நிலையில் சஞ்சீவ் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ஆலியா மானசா கர்பமாக இருக்கும் வயிற்றில் சஞ்சீவ் கை வைத்து நீங்கள் தான் என் வாழ்க்கை என பதிவிட்டுள்ளார். மேலும், அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் நலமுடன் வாழவும், குழந்தை நலமாக பிறக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்தது பெரும் வைரலாகி வருகின்றது.