AD

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பிரபலம்

தமிழ் சினிமா உலகில் ஒரு கால கட்டத்தில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். இவர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிகரீதியாக வெற்றியடைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். 

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் கிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ள வகையில் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து உள்ள இப் படத்தின் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்ட நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிகிறார். 

மேலும், இந்த படத்தின் தமிழ் உரிமையை அவரது தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார். இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். மேலும், இந்த படத்தின் இயக்குநர், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்திற்காக நடிகர் பிரசாந்த் அவர்கள் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இவ்வாறு இவர் உடல் எடையை  குறைத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறதனை பார்த்த ரசிகர் அனைவரும் பிரசாந்த்தா?? இது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் என்று கூறி வருகிறார்கள்.பிரசாந்த் சினிமாவில் நுழைந்த போது எப்படி இருந்தாரோ அதேபோல் பிரசாந்த் காட்சி அளித்து வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இனி பிரசாந்த் ஒரு கலக்கு கலக்க போகிறார் என்றும் கூறிவருகிறார்கள்.