AD

வைரலாகும் சிம்ரனின் வீடியோ - சரிமாரியாக திட்டும் ரசிகர்கள்

சினிமா உலகியே அன்றைய காலகட்டத்தில்  கலக்கிவந்தவர் இடுப்பழகி  சிம்ரன். இவர் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்டார் , தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தவர்  சிம்ரன். 

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு  இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது.

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார். மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருவதோடு இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். 

பேட்ட படத்தை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிற நிலையில் மேலும், விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார் சிம்ரன். இவர் தற்போது 43 வயதை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க வகையில்  சிம்ரன் நடன இயக்குனர் ஒருவருடன் நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இதனை கண்ட ரசிகர் ஒருவர் மீராமிதுன் பார்ட் 2 என்று கமென்டை பதிவிட்டுள்ளார். இந்த கமெண்ட்க்கு முக்கிய காரணமே மீராமிதுன் தான் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் இப்படி நெருக்கமாக நடனமாடி வீடியோக்களை பதிவிடுவார் ஆனால் தற்போது சிம்ரனும் இதுபோல வீடியோவை பதிவிட்டுள்ளார் என்பதாகும்.