AD

கோமாளி பட நடிகையின் வைரல் வீடியோ

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த படம் கோமாளி. இந்த படத்தை குறும் பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர் தான் இயக்கியுள்ளார். இதுவே அவர் இயக்கிய முதல் படம் ஆகும். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து உள்ளார். 

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அதிலும் இந்த படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவராக வரும் பகுதியில் ஜெயம் ரவிக்கு காதலியாக முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை சம்யுக்தா. கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். 

கோமாளி படத்தை தொடர்ந்து இவர்  பப்பி என்ற படத்தில் நடித்தார். மேலும் இந்த படத்தை மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய நட்பு தேவி  இயக்குகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதே போல பிட்னஸ் ப்ரீக்காக வளம் வரும் இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வருகிற நிலையில், சிலருக்கு மேலே ஏறுவதற்கு ஏணி தேவையில்லை. நாம் தொங்கிக்கொண்டே ஊசலாடுவோம் என்று கூறி ரோப்பில் தொங்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இதுக்கு பேரு டர்கிஸ் கெட்டப் என்று பதிவிட்டுள்ளார்.