AD

சமூகவலைத்தளத்தில் ஓவியாவை சரமாரியாக கேள்விகேட்ட ரசிகர்

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்   நடிகை ஓவியா இவர் ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் நடிகை ஓவியா தனது ஹேர்ஸ்டைலை டாம் பாய் லுக்கில் கட் செய்து கொண்டு வித்தியாசமாக சுற்றி வந்த நிலையில் மீண்டும் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார்.

சமீபத்தில் நடிகை ஓவியாவின் இந்த ஹேர்ஸ்டைலை கண்டு ரசிகர்கள் கண்டமேனிக்கு அவரைதிட்டியபடி  வருகிறார்கள் . அதில் ஒரு ரசிகர், மொக்க dp மொக்க ஹேர் கட். நீங்க பாஸ்ல வந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வைக்க கூடாது என்று கமன்ட் செய்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஓவியா, 

என்னுடைய மூளையைத்தான் வளர்க்க முயற்சி செய்து வருகிறேனே தவிர என்னுடைய முடியை அல்ல. என்னுடைய முடி, தோல்,  எதுவும் முக்கியம் கிடையாது. நான் எப்போதும் சுதந்திரம் ஆனவள். மேலும், நாம் அனைவரும் அழகானவர்கள் தான் என்று பதில் அளித்துள்ளார்.ஓவியாவின் இந்த பதிலுக்கு கமெண்ட் செய்த அந்த ரசிகர், ஓவியாவின் ரசிகர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இந்த ஹேர் ஸ்டைலை வெச்சுட்டு ஒரு ஷாப் ஓபன் பண்ண முடியுமா ? இல்லை கூப்பிடு வாங்கலா? என்று பதிலளித்தார். 

ரசிகரின் இந்த கமன்ட்டிற்கு பதில் அளித்த ஓவியா, என்னுடைய ரசிகர்கள் எப்போதும் தலைவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள் நான் விக் வச்சிக்கிறேன் என்று கமெண்ட் செய்துள்ளமை சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.