AD

முரளிக்கு எழுதிய கதையில் அஜித்

சினிமாவில் கதையை ஒருவருக்கு எழுதி அதில் மற்றொருவர் நடித்து வெற்றி கண்ட படங்கள் நிறையவுள்ளது. அந்த வகையில் இந்த மாதிரி படங்கள் ஒரு சில நடிகர்களுக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி தரும் நிலையில்  நடிகர் முரளி நடிக்கவிருந்த படத்தில் அஜித் நடித்து அவருடைய சினிமா கேரியரில் முக்கிய அம்சமாக அமைந்த படம் முகவரி.

ஒரு 25 வயது பட்டதாரி இளைஞன் தன் கனவுகளுக்காக சமூகத்திடம் அசிங்கப்பட்டு இறுதியில் அந்த கனவை அடைந்தாரா என்பதை உணர்வுபூர்வமாக சொன்ன படம் தான் முகவரி. உண்மையிலேயே முகவரி படம் தான் தல அஜித்துக்கு தமிழ் சினிமாவில் ஒரு முகவரியை கொடுத்தது என்று சொல்லலாம். முதன் முதலாக அஜித்துக்கு AK என்ற டைட்டில் கார்டு வந்ததும் இதில் தான்.

முதன் முதலில் இந்த கதை நடிகர் முரளியிடம்தான்  சென்றது பின் அவருக்கு முகவரி கதையில் எந்த ஈடுபாடும் இல்லாததால் அந்த கதை தல அஜித் அவர்களுக்கு கிடைத்தது. கிடைத்த பொக்கிஷத்தை அழகாக கையாண்டு தன்னுடைய சினிமா வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் படமாக மாற்றிக்கொண்டார் அஜித்.இந்த திரைப்படம் பல வெற்றித்திரைபடமானது மட்டுமல்லாது ரசிகர்களின் கனவுப்பபடமாக மாறியது எனலாம்.