AD

தோல்வியை ஒத்துகொண்ட ரஷ்மிகா

ரஷ்மிகா மன்தானா சமீபத்தில் நடத்திய போட்டோஷூட்டிற்கு வடிவேலுடன் இணைந்து வந்த மீம்ஸ்களுக்கு ரஷ்மிகா அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகை ரஷ்மிகா இவர் தனது முதல் படமான கீதா கோவிந்தம் மூலம் தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் பிரபலமானார். மஹேஷ் பாபுவுடன் சரிலேறு நீக்கவேறு என்ற படத்தில் நடித்திருந்தார் ரஷ்மிகா. தற்போது அவர் நடித்து வெளியாகியுள்ள பீஷ்மா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்ட இவர் எந்த படத்தின் ட்ரைலர் அல்லது டீஸர் வந்தாலும் நம்ம ஊரு மீம் கிரியேட்டர்ஸ் அதற்கு வடிவேலு வெர்சன் உருவாக்கி மக்களை மகிழ்விப்பார்கள். அதே போல ரஷ்மிகாவின் ஒவ்வொரு முகபாவனைக்கும் வடிவேலு நடித்த போட்டோக்களை இணைத்து வைத்து இதெல்லாம் எங்க தல எப்பவோ பண்ணிட்டாரு என்றவாறு பகிர்ந்து வந்தனர். 

இதையறிந்த ரஷ்மிகா அந்த மீம்ஸ்களுக்கு பதிலளிக்கும் வகையில் இதுக்கு மேல ஒத்துக்க முடியாது, வடிவேலு சார் தான் ரொம்ப கியூட் என்று பதிவிட்டிருந்தார். இதை ரஷ்மிகா ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.