AD

வைரலாகும் ஜெயம் ரவி மனைவியின் புகைப்படங்கள்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர்  ஜெயம் ரவி. 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும் சகோதரன் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் ரவி சினிமா உலகிற்கு அறிமுகமானார். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில்  கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்ற நிலையில் கடந்த ஆண்டு சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் டிக் டிக் டிக். இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனான ஆரவ்வும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜெயம் ரவிக்கு இரண்டாவது மகன் இருக்கிறார் என்பது பல பேர் அறிந்திடாத ஒன்று. அவருடைய பெயர் அயான்.சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அடிக்கடி தனது புகைப்படங்களை பதவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ஆர்த்தி, கதாநாயகிகளுக்கு இணையாக மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதை  ஜெயம் ரவி ரசிகர்கள் பெரிது் வைரலாக்கிவருகின்றனர்.