AD

குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்ற பிரபல நடிகர்

குறுகிய காலத்திலேயே தனெக்கென ஒரு பாதையை  உருவாக்கி தமிழ் சினிமா உலகிலுள்ள உச்ச நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ் . இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், உலகில் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர்.

தொடர்ச்சியாக பல வெற்றித்திரைபடபடங்களுக்கு அதிபதியாக திகழும் இவர்   தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். அந்த வகையில்  சில தினங்களுக்கு முன்பு தான் தனுஷின் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் பொலிசில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில்

 நேற்று மகா சிவராத்திரி என்பதால் நடிகர் தனுஷ் அவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் தேனியிலுள்ள தன்னுடைய குலதெய்வ கோவிலான கருப்புசாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்துள்ளார். தனுசுடன் அவருடைய மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவரது மகன்கள் அனைவரும் சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் கோவிலில் இருக்கிற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.