AD

பதறியடித்து ஓடிய நட்சத்திரங்கள் - ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில்

சென்னையில் உள்ள EVP ஸ்டுடியோவில் மிக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பில்,  திடீர் என ஏற்பட்ட விபத்தில் சிக்கி, கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகிய மூவர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து நடந்த போது, படப்பிடிப்பில் இருந்த நடிகர் கமல், காஜல் அகர்வால், மற்றும் இன்னும் சிலர் மயிரிழையில் உயிர் தப்பினர்.

இந்நிலையில் இவ் விபத்தில் மரணமடைத்தவர்களின் சடலத்தை வைத்தியசாலையில் அவர்களின் உறவினர்களிடையே ஒப்படைத்த வேளை அங்கு பதறியடித்து ஓடி வந்த சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும்  மூவரின் உடலைப்பார்த்து கதறியழுதது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.