AD

விஜய்யை கண்டு கொள்ளாத அட்லீ - கோவத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் அட்லி  இவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி  திரைப்படம் பிகில் இப் படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித் தந்து வருகிறது. 

இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லியின் மூன்று திரைப்படங்கள் விஜயின் திரைப்படம் தான். மேலும், அட்லி எப்போதும் விஜய்யை தனது அண்ணன் என்று கூறிக்கொண்டு வருகிறார். ஆனால், சமீபத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலிருந்து ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியாகியிருந்தது. 

இந்த பாடலை கேட்டு பல்வேறு பிரபலங்களும் பாராட்டி டுவீட் செய்திருந்தார்கள். ஆனால், அட்லி இது குறித்து எந்தவொரு ட்வீட்டையும் இதுவரை செய்யாமல் இருந்து வருகிறார். இதுகூட விஜய் ரசிகர்களுக்கு பிரச்சனையாக தோன்றவில்லை. ஆனால் விஜய் படத்தின் பாட்டிற்கு டுவீட் செய்யாத அட்லி விக்னேஷ் சிவனின் படத்திற்கு டுவீட் செய்திருப்பதுதான் விஜய் ரசிகர்களை கோவத்தில் ஆழ்த்தியுள்ளது.

விக்னேஷ் சிவன் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல்  என்ற படத்தை இயக்கி தாமே தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். அந்த பதிவிற்கு வாழ்த்து தெரிவித்தே அட்லி டுவீட் செய்திருந்தார். ஆனால், அதே நாளில் வெளியான குட்டிக்கதை பாடலுக்கு அட்லி எந்த ஒரு டுவீட்டையும் செய்யவில்லை.

அவ்வளவு ஏன் காதலர் தினத்தன்று தான் விஜய்யின் குட்டி கதை பாடல் வெளியாகியிருந்தது அன்று தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார் ஆனால், விஜயின் பாடலை டுவீட்  செய்யவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் கடுப்பில் ஆழ்ந்துள்ளார்கள். மேலும், குட்டி கதை பாடல் குறித்து ஏன் இன்னும் எதுவும் சொல்லவில்லை என்று அட்லியை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.