AD

Biggboss தர்சன் ,சனம் பிரிவுக்கு பிரபல நடிகர் காரணமா ?

சனம் ஷெட்டியும், தர்ஷனும் ஆளாளுக்கு “உன் மேலதான் தப்பு, உன் மேலதான் தப்பு” என்று ஸ்கூல் பிள்ளைகள் போல் ஒருவர் மீது ஒருவர் புகார்கள் செய்துகொண்டிருக்க, ஆனா ,இது எல்லாத்துக்கும் ஒரு பிரபல நடிகர் தான் காரணம் .இப்போ யாருயா புதுசா இப்படி யோசிக்கிறவங்க ஒரு பக்கம் இருப்பிங்க .

இன்னொரு பக்கம் ,யோவ் என்னய்யா சொல்ற ? என்று புருவத்தை உயர்த்தி கேட்பிங்க , அது வேரா யாரும் இல்லைங்க "நம்ம வம்பு தம்பி சிம்பு தான்".ஆமா பாஸ் இவ்வளவு பிரச்சினைகளுக்கு காரணமே சனம் ஷெட்டி சிம்புவுடன் இருந்த நெருக்கம் தான். மகத்தின் Bachelor Party – இல் நடந்த களேபரம் உலகறிந்த விஷயம்.நேற்று வெளிவந்த சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்களில் சனம் இல்லை, அதை தவிர இதுவரை வந்த சிம்பு புகைப்படங்களில் சனம் ஷெட்டி இல்லாத புகைப்படங்கள் கிடையாது.


சிலர் சனமும் சிம்புவும் காதலிக்கிறார்கள் என்று அடித்து சொல்கின்றனர். இன்னும் சிலர், சிம்புவ பத்தி தெரியாதா ? பத்தோட பதினொண்ணு என்று கேலி செய்கின்றனர். இன்னும் சிலர் தர்ஷன் சனம் பிரிந்ததர்க்கு சிம்புதான் காரணம் என்று ஆணித்தரமாக சொல்கின்றனர். சமீபகாலமாக சனம் சிம்புவின் பிடியில் இருக்கிறார் என்பது Latest தகவல். இதை வெளியில் சொல்ல முடியாமல் தான் தர்ஷன் Ex Boyfriend Night Stay என்று ஏதேதோ சொல்கிறார்.இது எங்க போய் முடிய போகுதோ தெரியல .