தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ்
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்றுமுன்தினம் டெல்லியில் நடைபெற்றது. குறித்த விழாவில், துணைத் ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு விருதுகளை வழங்கிவைத்தார்.
இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி திரைப்படத் துறையில் அளிக்கப்படும் நிலையில் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சனுக்கும் சிறந்த தமிழ்ப்படமாக பாரம் சிறந்த ஹிந்திப் படமாக அந்தாதுன் தேர்வானது.
அத்துடன் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடிகை படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது மட்டுமன்றி அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார்.

Post a Comment