AD

அதிகார பூர்வமாக வெளியான சூர்யாவின் அடுத்த படம்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்  தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் புரமோஷன் மற்றும் வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சூர்யாவின் 40ஆவது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவதாகவும், இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த அறிவிப்பை கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.