AD

கார்த்திக் சுப்புராஜின் அல்லி

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் நிறுவனம் சுயாதீன திரைப்படங்களுக்காக பிரத்யேகமாக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளது. குறித்த தயாரிப்பின் கீழ் உருவாகியுள்ள முதல் திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.

‘அல்லி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை சனல் குமார் சசிதரன் என்பவர் இயக்கியுள்ள நிலையில் இந்த போஸ்டரை இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் வெளியிட்டு ‘ஸ்டோன் பென்ச் இண்டி’ படங்களுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.